
நான் கர்ப்பம் இல்லை : கரீனா கபூர் மறுப்பு
அது குறித்து சமூக வலைத்தளத்தில், “நான் கர்ப்பம் இல்லை. தான் ஏற்கெனவே இந்திய மக்கள் தொகைக்கு நிறைய செய்துவிட்டேன் என சைப் சொன்னார்” என கொஞ்சம் கிண்டலாகவும் பதிவிட்டிருந்தார்.
சைப் அலிகான் அவரது முதல் மனைவி நடிகை அம்ரிதா சிங் இருவருக்கும் ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மகள் சாரா அலிகான் தற்போது பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகை. மகன் இப்ராஹிம் குழந்தை நட்சத்திரமாக ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். தற்போது கரண் ஜோஹர் இயக்கி வரும் "ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி" படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
சைப் அலி கானுக்கு இரண்டு மனைவிகள் மூலம் மூன்று மகன்கள், ஒரு மகள் இருப்பதைத்தான் கரீனா கபூர் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!