
119 கோடிக்கு வீடு வாங்கிய ரன்வீர் சிங்
அடுக்கு மாடி குடியிருப்பில் 16, 17, 18, 19 ஆகிய தளங்களில் அந்த வீடு அமைந்துள்ளதாம். மொத்தம் 11,266 சதுர அடி வீடு. மாடிப் பகுதி மட்டும் 1300 அடி. 19 கார்களை நிறுத்தும் வசதி கொண்டது. அதற்காக பத்திரப் பதிவுக் கட்டணம் மட்டும் 7.13 கோடி ரூபாயாம்.
ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரது வீட்டிற்கருகில்தான் ரன்வீர் சிங் வாங்கியுள்ள "சாகர் ரேஷம்" என்ற இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறதாம். தங்களது ஓ பைவ் ஓ மீடியா கம்பெனி மூலம் ரன்வீர் சிங்கும், அவரது அப்பாவும் இந்த குடியிருப்பை புக் செய்துள்ளார்களாம்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவை திருமணம் செய்துள்ள ரன்வீர் சிங் தற்போது "சர்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி" படங்களில் நடித்து வருகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!