
நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன்
இந்த படம் தற்போது ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் போலா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தர்மேந்திர சர்மா என்பவர் இந்தப்படத்தை இயக்கி வந்த நிலையில் தற்போது அவரை விலக்கிவிட்டு அஜய்தேவ்கனே டைரக்சன் பணியையும் கவனித்து வருகிறார்.
இந்த படத்தில் கார்த்திக்கு அடுத்ததாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நரேன். தற்போது அவரது கதாபாத்திரத்தை பெண் போலீஸ் அதிகாரியாக மாற்றிவிட்ட அஜய் தேவ்கன், அந்த கதாபாத்திரத்தில் தனது நீண்டநாள் தோழியும், நடிகையுமான தபுவை நடிக்க வைத்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!