
கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம்
இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை, பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன் பெற்றிருந்தார். அவரே கார்த்தி நடித்த கேரக்டரில் நடிப்பதாகவும் அறிவித்திருந்தார். இதன் படப்பிடிப்பு மும்பையில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. படத்தை அஜய் தேவ்கனின் உறவினரான தர்மேந்திரா இயக்கி வந்தார்.
தர்மேந்திர ஷர்மாவின் இயக்கத்தில் திரும்பி இல்லாத அஜய்தேவ்கன் அவரை வெளியேற்றி விட்டு படத்தை தானே இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே "யு மி அவுர் ஹம்", "ஷிவாய்", "ரன்வே 34" ஆகிய படங்களை இயக்கியவர். போலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அடுத்த வருடம் மார்ச் 30ம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!