
இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை
அப்படிபட்டவரின் வாழ்க்கை "தி அன்டோல்ட் வாஜ்பாய்: பொலிடீஷ்யன் அண்ட் பாரடாக்ஸ்" என்ற பெயரில் புத்தகமாக எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு வாஜ்பாயின் வாழ்க்கை சினிமா ஆகிறது. படத்திற்கு "அடல்" என்று டைட்டில் வைத்துள்ளனர்.
தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வாஜ்பாய்க்கு 99வது பிறந்த நாள் அன்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். மேற்கண்ட தகவலை படத்தை தயாரிக்கும் வினோத் பானுஷாலி தெரிவித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!