
சல்மானைக் கவர்ந்த ஊ சொல்றியா மாமா
இப்படத்தில் இடம் பெற்ற "ஓ அன்ட்டாவா" பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. அப்பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சிகரமாக நடனமாடி இருந்தார். தமிழில் அப்பாடல் "ஊ சொல்றியா மாமா" என ஆன்ட்ரியா பாட இடம் பெற்றது.
சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பாலிவுட் ஹீரோவான சல்மான் கானிடம் “கடந்த வருடத்தில் எந்த சினிமா பாடல் உங்களை ரசிக்க வைத்தது ?,” என்ற கேள்விக்கு "ஓ அன்ட்டாவா.." என பாடிக் காட்டுகிறார்.
இந்த வீடியோவை புஷ்பா படக்குழு, நடிகை சமந்தா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!