
பியர் கிரில்ஸ் உடன் ரன்வீர் சிங் சாகச பயணம்
இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் தான் மட்டுமல்லாமல் பிரபலங்களுடன் காட்டுக்கு பயணம் செய்வது என்பதும் நடைபெறுகிறது. அந்த வகையில், பியர் கிரில்ஸ், பிரதமர் மோடி,நடிகர் ரஜினிகாந்த் போன்ற இந்திய பிரபலங்கள் உடன் காட்டுப் பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் அவர் தற்போது ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் உடன் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சாகச நிகழ்ச்சி தனியார் ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை 8 ஆம் தேதி ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!