
பான் இந்தியா படத்தில் சன்னி லியோன்
இது விஷ்ணு மஞ்சுவின் 19வது படம். ஏவிஏ எண்டர்டெயின்மெண்ட் என்று பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ள விஷ்ணு மஞ்சு இந்த படத்தை முதல் படமாக தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் ஜின்னா என்று அறிவித்துள்ள விஷ்ணு மஞ்சு இதனை பான் இந்தியா படம் என்றும் அறிவித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுடன் ஹிந்தியில் படம் வெளிவருவதாக அறிவித்துள்ளார்.
இதுதவிர தனது தயாரிப்பு நிறுவனத்தில் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஆடியோ வியாபாரத்திலும் ஈடுபட இருப்பதாகவும், ரிக்கார்டிங் ஸ்டூடியோ கட்டி இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!