
பெரும் தோல்வியைத் தழுவிய சாம்ராட் பிருத்விராஜ்
கடந்த ஐந்து நாட்களில் இப்படம் சுமார் 50 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. நேற்று வட இந்தியாவிலேயே பல தியேட்டர்களில் மக்கள் வராத காரணத்தால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அக்ஷய்குமார் நடித்து வெளிவந்த ஒரு படத்திற்கு ஒரு வாரத்திற்குள்ளாக இப்படி காட்சிகள் ரத்து செய்யப்படுவது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிருந்து பாலிவுட்டிற்குச் சென்று வெற்றி பெற்ற "புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2" ஆகிய படங்களின் தாக்கம் அங்கு அதிகமாக இருக்கிறது. இந்தப் படங்களைப் போல நேரடி ஹிந்திப் படங்களையும் அங்குள்ள ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். தென்னிந்தியப் படங்களைப் போல ஆக்ஷன் காட்சிகள் பிரம்மாண்டமாகவும், அசத்தலாகவும் இருக்க வேண்டும் என பாலிவுட் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என மேலும் தெரிவிக்கிறார்கள். பாலிவுட் இயக்குனர்கள் தங்கள் ஸ்டைலை மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது என விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!