
திருநங்கையாக நடித்த ராஜ்பால்
திருநங்கையாக நடித்திருப்பது குறித்து ராஜ்பால் கூறியதாவது: மும்பையில் வாழும் ஒரு திருநங்கையின் வாழ்க்கைதான் படம். ஒரு பாலின மாற்றம் ஒரு மனிதனை எப்படி புரட்டிப்போடுகிறது என்பது கதை. இந்த படத்தில் நிஜமான திருநங்கையை நடிக்க வைத்திருக்கலாமே... நீங்கள் ஏன் நடித்தீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு விவசாயின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டால், உண்மையான விவசாயி படத்தில் நடிக்க மாட்டார். அதேபோல், "அர்த்" படத்தில் நான் திருநங்கையாக நடிக்கிறேன், அதே நேரத்தில் ஒரு தந்தையாகவும், கணவனாகவும் நடித்திருக்கிறேன். ஒரு திரைப்படம் முக்கியமாக பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படுகிறது, ஆனால் ஒரு நடிகரால் மட்டுமே ஒரு கதாபாத்திரத்தின் பல அடுக்குகளுக்கு நியாயம் செய்ய முடியும் என்று நான் உணர்கிறே என்கிறார் ராஜ்பால்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!