
அட்லி - ஷாருக்கான் பட தலைப்பு இதுவா?
இந்த படத்தின் டைட்டில் "லயன்" என்று வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு "ஜவான்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் டீஸர் தயாராகி அதற்கான சென்சார் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், அதில் இருந்து கசிந்த தகவலின் படி தான் இந்த படத்தின் டைட்டில் "ஜவான்" என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
"ஜவான்" படத்தை முடித்துவிட்டு இயக்குனர் அட்லி அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!