
51 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் ஆகிறது ஆனந்த்
நட்பு பற்றி இன்றைக்கு படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அன்றைக்கு நட்பின் உன்னதத்தை பேசிய படம் இது. தற்போது இதனை 50 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். படத்தின் அசல் தயாரிப்பாளரான என்.சி.சிப்பியின் பேரன் சமீர் ராஜ் சிப்பி, தயாரிப்பாளர் விக்ரம் காக்கருடன் இணைந்து இதனை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
ஆனால் ஆனந்த் ஒரு கிளாசிக்கல் மூவி அதனை ரீமேக் என்ற பெயரில் கெடுத்து விடாதீர்கள். அந்த படம் அப்படியே இருக்கட்டும் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து உள்ளார்கள். இன்னும் சிலர் அமிதாப் பச்சன் கேரக்டருக்கு அக்ஷய் குமாரையும், ராஜேஷ் கண்ணா கேரக்டருக்கு ரன்பீர் கபுரையும் சிபாரிசு செய்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!