
சல்மான்கானை இயக்க தயாராகும் கப்பார் சிங் இயக்குனர்
இந்த நிலையில் கடந்த மாதம் மும்பையில் சல்மான்கானுடன் ஹரிஷ் சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தின. அடுத்ததாக சல்மான்கானை இயக்குவதற்காக ஹரிஷ் சங்கர் தயாராகி வருகிறார் என்றும் அதன் முன்னோட்டமாக தான் இந்த சந்திப்பு என்றும் கூட செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில் சல்மான் கானுக்காக ஹரிஷ் சங்கர் ஒரு கதையை தயார் செய்வது செய்து வருவது உண்மைதான் என்றும், ஆனால் உரிய நேரத்தில் அதை சல்மான்கானிடம் அவர் சொல்லுவார் என்றும் இரு தரப்புக்கும் நெருங்கிய வட்டாரத்தினர் கூறுகின்றனராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!