
அக்சய் குமாருக்கு இரண்டாவது முறையாக கொரானோ பாதிப்பு
இது குறித்து அவர், “கேன்ஸ் 2022 திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆனால், கொரானோ பாசிட்டிவ் வந்து விட்டது. நான் ஓய்வெடுக்க வேண்டும். அனுராக் தாக்கூர் மற்றும் நமது குழுவினருக்கு எனது வாழ்த்துகள். அங்கு இருக்கும் வாய்ப்பைத் தவறிவிடுகிறேன்,” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அக்சய்குமார் நடித்துள்ள "பிருத்விராஜ்" படம் ஜுன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ள முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!