
முன்னாள் மனைவியுடன் மகள் பிறந்தநாளைக் கொண்டாடிய ஆமீர்கான்
இரா கான் நேற்று தன்னுடைய 25வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஒரு பக்கம் தனது காதலர் மற்றொரு பக்கம் தனது பெற்றோருடன் அவர் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அவை நீச்சல் குள பிறந்தநாள் கொண்டாட்டங்களாகத்தான் இருந்துள்ளது.
நீச்சல் உடையில் இரா கான் கேக் வெட்ட ஆமீர் கான், ரீனா தத்தா உடனிருந்துள்ளனர். கூடவே ஆமீர் கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவின் மகன் ஆசாத்தும் உடனிருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலகப் பரவி வருகின்றன. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆமீர்கானின் மகள் இப்படி நீச்சல் உடையில் பிறந்த நாள் கொண்டாடுவது சரியா என சிலர் விமர்சித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!