
பாலிவுட் தடுப்பூசியோடு வரட்டும், ராம்கோபால் வர்மா கிண்டல்
இது குறித்து ஏற்கெனவே ராம்கோபால் வர்மா சில பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இப்போது மீண்டும் கிண்டலான ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். “தெலுங்கு, கன்னடப் படங்கள் ஹிந்திப் படங்களை கோவிட் வைரஸ் போல நோய்த் தொற்றுக்கு ஆளாக்கிவிட்டன. பாலிவுட் விரைவில் தடுப்பூசியுடன் வரும் என எதிர்பார்க்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான ஷாகித் கபூர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த "ஜெர்சி" படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடைந்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டில் "காஷ்மீர் பைல்ஸ்" தவிர வேறு எந்தப் படமும் வசூலைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!