
இலங்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் : ஜாக்குலின் வேண்டுகோள்
தற்போது இலங்கையில் நடந்து வரும் பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள், விலைவாசி உயர்வு, மக்கள் போராட்டம் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : ‛‛எனது நாட்டு மக்களை பார்க்கும்போது மனம் கஷ்டப்படுகிறது. இலங்கை குடிமகளாக இருப்பதால் இதையெல்லாம் பார்க்கும்போது மனம் வருத்தமாக இருக்கிறது. தற்போதைய சூழல்கள் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்ல வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என் நாட்டுக்காக, மக்களுக்காக 2 நிமிடம் அமைதியாக பிரார்த்தனை செய்தால் கூட போதும். அதனால் நிறைய பலன் கிடைக்கும்"" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!