
தி காஷ்மீர் பைல்ஸ் : ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - ஆமீர்கான்
ஆனால் சில அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ஆமீர்கான் காஷ்மீர் பைல்ஸ் படம் ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் என்று கூறியிருக்கிறார்.
மும்பையில் நடந்த ஆர்ஆர்ஆர் பட அறிமுக விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஒவ்வொரு இந்தியரும் "காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படத்தை பார்க்க வேண்டும். மனிதநேயம் உள்ள அனைவர் மனதையும் இந்தப் படம் உணர்ச்சிவசப்பட வைக்கும். கண்டிப்பாக நான் இந்தப் படத்தை பார்ப்பேன். தியேட்டர்களில் காஷ்மீர் பைல்ஸ் வெற்றிகரமாக ஓடுவதை பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. என்று பேசினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!