
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஆலியா பட்
பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட்டில் அறிமுகமாவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோரது வரிசையில் தற்போது ஆலியாவும் இடம் பிடித்துள்ளார்.
நெட்பிளிக்ஸ் புதிதாகத் தயாரிக்க உள்ள படத்தில் ஆலியா பட் நடிக்க உள்ளார். கால் கடோட், ஜேமி டோர்னன் ஆகியோரும் அப்படத்தில் நடிக்க உள்ளதாக நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டாம் ஹார்ப்பர் இயக்க உள்ள இப்படத்திற்கு "ஹார்ட் ஆப் ஸ்டோன்" எனத் தலைப்பு வைத்துள்ளார்கள்.
ஹாலிவுட் செல்லும் ஆலியாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!