
பாலிவுட் படம் இயக்கும் பா.ரஞ்சித்
சார்பட்டா பரம்பரை படத்துக்கு முன்பே ஜார்கண்ட் பழங்குடியின மக்களின் தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை திரைப்படமாக்க முயற்சித்தார் பா.ரஞ்சித். பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் அந்த முயற்சி தள்ளிப்போனது. தற்போது பிரபல இந்தி பட தயாரிப்பு நிறுவனமான நமாஹ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் ஷரீன் மன்த்ரி, கிஷோர் அரோரோ ஆகியோர் தயாரிக்கிறார்கள். "பிர்சா" என்ற தலைப்பில் இந்தப் படம் தற்போது தயாராகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பான் இந்தியா படமாக இது உருவாவதால் எல்லா மொழி நட்சத்திரங்களும் இதில் நடிப்பார்கள் என்று தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!