
ஜிம்மில் தவறி விழுந்தார் : ஜான்வியின் கை எலும்பு முறிந்தது
ஜான்வி தினமும் காலையில் வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அவர் உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்தார். விழும்போது கையை தரையில் ஊன்றியதால் கை எலும்பு முறிந்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் நடித்து வந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!