
ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்த புஷ்பா
தெலுங்கில் கிடைத்த வரவேற்பு போலவே மற்ற மொழிகளுக்கும் வரவேற்பு கிடைத்தது. ஹிந்தியில் இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. நேரடி ஹிந்திப் படங்களைக் காட்டிலும் இப்படத்தின் வசூல் நன்றாகவே இருந்தது. இத்தனைக்கும் பெரிய அளவில் ஹிந்தியில் படத்தை பிரமோஷன் செய்யவில்லை.
ஒரு மாதத்திற்குள்ளாக இப்படம் ஓடிடியிலும் வெளியானது. மற்ற மொழிகளில் ஜனவரி 7ம் தேதிகளில் வெளியாக, ஹிந்தியில் மட்டும் ஜனவரி 14ம் தேதி வெளியானது. ஓடிடியில் வெளியானாலும் தியேட்டர்களிலும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் இப்படம் 100 கோடி வசூலை நெருங்கியது. தற்போது அதைக் கடந்துள்ளது.
தெலுங்கிலிருந்து ஹிந்திக்குச் சென்ற நடிகர்களில் பிரபாஸ் இதற்கு முன்பு "பாகுபலி 1, 2, சாஹோ" ஆகிய படங்களில் 100 கோடி வசூல் சாதனையைப் படைத்திருந்தார். அவருக்குப் பிறகு இப்போது அல்லு அர்ஜுன் "புஷ்பா" மூலம் 100 கோடி சாதனையைப் படைத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!