
புத்தாண்டு நடனத்துக்கு எதிர்ப்பு : புதுச்சேரியில் சன்னி லியோன் பேனரை கிழித்து எறிந்தனர்
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நேற்று 3 நாள் இசை நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் நடனமாட இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு, அதற்கான டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு வந்தது.
சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு புதுச்சேரியில் உள்ள பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அமைப்பினர் நேற்று பழைய துறைமுகச் சாலையில் கூடி கோஷம் எழுப்பியபடி துறைமுக வளாக நுழைவாயிலை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீச்சாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நிகழ்ச்சிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சன்னி லியோன் பேனரைக் கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!