
விக்ரம் வேதா ஹிந்தி : இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு
ஹிரித்திக் ரோஷன், சைப் அலிகான், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இயக்குகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு லக்னோவில் 19 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது.
முதல் கட்டப் படப்பிடிப்பு அபுதாபியில் நடைபெற்றது. அடுத்து மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஜனவரி 2022ல் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தை 2022 செப்டம்பர் 30ம் தேதி வெளியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகானும் நடிக்கின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!