
சல்மான்கானை பாம்பு கடித்தது; சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் ஆனார்
இந்தநிலையில் நாளை அவரது பிறந்த நாள் என்பதால் அவரது பன்வெல் பண்ணை வீடு சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை அந்த பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தபோது சல்மான்கானின் கையில் ஒரு பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவரை கடித்தது விஷமற்ற பாம்பு என்பது தெரியவந்துள்ளது. என்றாலும் அவருக்கு விஷ எதிர்ப்பு ஊசி செலுத்தப்பட்டு சில மணி நேரம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதை யடுத்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அதனால் நாளை நடைபெறும் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் வழக்கம்போல் சல்மான்கான் பங்கேற்பார் என்று தெரியவந்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!