
ரூ.15 கோடி: நிஜ ஹீரோக்களுக்கு திரை ஹீரோக்கள் பரிசு
இதில் கேப்டன் கபில்தேவ்வாக ரன்வீர் சிங் நடித்துள்ளார், ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்துள்ளார். கபில்தேவ் மனைவியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்தில் உலக கோப்பை கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு உரிமத் தொகையாக படத் தயாரிப்பு தரப்பில் இருந்து 15 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் எதிர்பார்க்காவிட்டாலும், படத் தயாரிப்பு இந்த பரிசை அவர்களுக்கு வழங்கி கவுரவித்தது. இதில் கேப்டன் கபில்தேவுக்கு மட்டும் 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா 83ல் உலக கோப்பையை வென்றபோது வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கிய சம்பளம் 2100 ரூபாய் தான். மொத்த அணிக்கும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் 83 படத்தின் மூலம் அவர்களுக்கு 15 கோடி கிடைத்துள்ளது. ஒரு வெற்றி காலம் கடந்தும் அதற்கான பலனை கொடுத்துக் கொண்டிருக்கும் என்று படத்தில் ஒரு வசனம் வரும். அது இப்போது உண்மையாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!