
வித்யாபாலனின் தந்தையாக நடிக்கும் தலைவாசல் விஜய்
“தும்ஹாரி சுலு, டர்ட்டி பிக்சர் ஆகிய படங்களில் வித்யாபாலனின் நடிப்பை பார்த்து வியந்த நான், இப்போது இந்தப்படத்தில் நேரில் அவரது மாறுபட்ட மற்றுமொரு நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். புரிந்துகொள்வதற்கு ரொம்பவே கடினமான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன் என கூறியுள்ளார் தலைவாசல் விஜய். தற்போது ஊட்டியில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தலைவாசல் விஜய் அடுத்ததாக மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.
பிரபல விளம்பர பட இயக்குனரான ஷிர்ஷா குகா தகுர்த்தா என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் தடைகளற்ற நவீன மனித உறவுகள் பற்றி அலசுகிறது. இந்தப்படத்தில் இலியானா இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!