
மலையாள இயக்குனருக்கு ஜான்வி கபூர் நன்றி
இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இன்னொரு பக்கம் இந்தப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான "மிலி"யில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். மலையாளத்தில் ஹெலனை இயக்கிய மாத்துக்குட்டி சேவியரே ஹிந்தியிலும் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார் ஜான்வி கபூர். “இப்படிப்பட்ட அற்புதமான ஒரு இயக்குனருடன் இணைந்து பயணித்தது நல்ல அனுபவம்” என அவருக்கு நன்றி கூறியுள்ளார் ஜான்வி கபூர்.
அதேபோல மாத்துக்குட்டி சேவியரும், ஜான்வி கபூர் சிறப்பாக ஒத்துழைத்து நடித்ததை பாராட்டும் விதமாக, ‛‛நீங்கள் இல்லையென்றால் நான் ரொம்பவே கவலைப்பட்டு போயிருப்பேன்.. நீங்கள் எனக்காக செய்த எல்லாவற்றுக்கும் நன்றி.. இதை ஒருபோதும் மறக்க மாட்டேன் நன்றி"" என தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!