
கார் விபத்தில் நடிகை படுகாயம்
இந்த நிலையில் அர்ஷி கான் நேற்று முன்தினம் டில்லி மால்வியா நகர் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கார் சாலையோர தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அர்ஷி கான், உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர், விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!