
ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் தேரே இஷ்க் மெய்ன்
நவ 28, 2025
Advertisement
"ராஞ்சனா, அத்ராங்கி ரே" படங்களுக்குப் பிறகு ஆனந்த் எல் ராய், தனுஷ் கூட்டணியில் உருவான "தேரே இஷ்க் மெய்ன்" ஹிந்திப் படம் இன்று வெளியானது. இப்படத்தைத் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவே கூறியுள்ளனர்.
தனுஷ் நடித்து ஹிந்தியில் இதற்கு முன்பு வெளிவந்த படங்களில், ஆனந்த் எல் ராய் உடன் அவர் முதன் முதலில் இணைந்த, ஹிந்தியில் அறிமுகமான "ராஞ்சனா" மட்டுமே 100 கோடியைக் கடந்தது. அதன் பின் வெளியான "ஷமிதாப்" படம் தோல்வியடைந்தது. அதற்கடுத்து வந்த "அத்ராங்கி ரே" படம் ஓடிடியில் நேரடியாக வெளியானது.
பாலிவுட் வட்டாரங்களில் "தேரே இஷ்க் மெய்ன்" படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று நம்புகிறார்கள். தமிழ், தெலுங்கில் இப்படத்திற்காக எந்தவிதமான புரமோஷனும் செய்யவில்லை. இரண்டு மொழிகளிலும் தனுஷுக்கு நல்ல மார்க்கெட் இருந்தும் அதை செய்யத் தவறிவிட்டார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…