பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்
பிப் 26, 2024
Advertisement
பிரபல பாலிவுட் மற்றும் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ், 72, உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்.
ஹிந்தி சினிமாவில் பிரபல பாடகராக வலம் வந்தவர் பங்கஜ் உதாஸ். பல்வேறு இசை ஆல்பங்களிலும் பாடி உள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(பிப்., 26) சிகிச்சை பலனின்றி காலமானார்.
குஜராத்தில் பிறந்த பங்கஜ், 1970களில் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். 1986ல் வெளியான "நாம்" படத்தில் இடம்பெற்ற "சிட்டி ஆயி ஹை" என்ற பாடல் பங்கஜ் உதாஸை பிரபலமாக்கியது. தொடர்ந்து ஹிந்தியில் பல நூறு பாடல்களை பாடி உள்ளார். இசை மற்றும் கலை உலகில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு கடந்த 2006ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
பங்கஜ் உதாஸ் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!