
‛சூரரைப்போற்று ஹிந்தி ரீ-மேக்கான ‛சர்பிரா ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜூன் 15, 2024
Advertisement
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் "சூரரைப்போற்று". கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து வெளியானது. இப்படம் தற்போது ஹிந்தியில் "சர்பிரா" என்கிற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தை வருகின்ற ஜூலை 12ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!