
ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன்
இதில் ரன்வீர் சிங் தவிர, சஞ்சய் தத், அக் ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு நிமிடம் 40 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பார்த்தவர்களுக்கு இரண்டு சர்பிரைஸ். இந்த படத்தில் தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ‛பேபி" சாரா ஹீரோயினாக வருகிறார். மாறுபட்ட கெட்அப்பில் மாதவனும் நடித்து இருக்கிறார். இந்த படம் தமிழிலும் டப்பாக வரும் என தெரிகிறது. டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழில் சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, ஹலிதா சமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி போன்ற படத்தில் சாரா நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனில் சின்ன வயது ஐஸ்வர்யாராய் கேரக்டரில் வந்தார். கொட்டேசன் கேங் என்ற படத்தில் தம் அடிப்பவராக நடித்து சர்ச்சையை கிளப்பினார். இப்போது ஹிந்தியில் தன்னை விட 20 வயது அதிகமான ஹீரோவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!