
புஷ்பா-2 சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் துரந்தர்
டிச 26, 2025
Advertisement
ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் துரந்தர். அவருடன் அக்சய் கண்ணா, சஞ்சய்தத், மாதவன், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 21 நாளில் ரூ.1006.7 கோடி வசூலித்திருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் 789.18 கோடியும், உலகளவில் 217.5 கோடியும் அடக்கம். இந்த துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த துரந்தர் படத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் 285 கோடிக்கு வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த "புஷ்பா -2" படத்தின் ஓடிடி உரிமை 270 கோடிக்கு விற்பனையான நிலையில், தற்போது அதைவிட துரந்தர் படம் அதிக தொகைக்கு விற்பனையாகி, இந்திய அளவில் இதுவரை ஓடிடியில் விற்பனையான படங்களில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட முதல் படமாகியுள்ளது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!