ராமாயணா படம் சர்வதேச அளவில் 50,000 திரையரங்குகளில் ரிலீஸ்
ஆக 07, 2026
Advertisement
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகி வரும் ராமாயணா படம் வெளியீட்டிற்கு முன்பாகவே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. சர்வதேச சந்தைகளில் சுமார் 50,000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே சர்வதேச அளவில் திட்டமிடப்பட்ட மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் சர்வதேச விநியோக உரிமையைப் பெற்றுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உலகளவில் இதன் பிரம்மாண்ட ரிலீஸ் அளவீடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளைத் தாண்டி, உலகளாவிய சினிமா ரசிகர்களைச் சென்றடையும் நோக்கில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் இந்த காவியத் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
இப்படத்தின் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!