ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்த புஷ்பா
ஜன 31, 2022
Advertisement
தெலுங்கிலிருந்து அடுத்த பான்-இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்துள்ளவர் அல்லு அர்ஜுன். தெலுங்கில் தயாரான "புஷ்பா" படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியானது.
தெலுங்கில் கிடைத்த வரவேற்பு போலவே மற்ற மொழிகளுக்கும் வரவேற்பு கிடைத்தது. ஹிந்தியில் இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. நேரடி ஹிந்திப் படங்களைக் காட்டிலும் இப்படத்தின் வசூல் நன்றாகவே இருந்தது. இத்தனைக்கும் பெரிய அளவில் ஹிந்தியில் படத்தை பிரமோஷன் செய்யவில்லை.
ஒரு மாதத்திற்குள்ளாக இப்படம் ஓடிடியிலும் வெளியானது. மற்ற மொழிகளில் ஜனவரி 7ம் தேதிகளில் வெளியாக, ஹிந்தியில் மட்டும் ஜனவரி 14ம் தேதி வெளியானது. ஓடிடியில் வெளியானாலும் தியேட்டர்களிலும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் இப்படம் 100 கோடி வசூலை நெருங்கியது. தற்போது அதைக் கடந்துள்ளது.
தெலுங்கிலிருந்து ஹிந்திக்குச் சென்ற நடிகர்களில் பிரபாஸ் இதற்கு முன்பு "பாகுபலி 1, 2, சாஹோ" ஆகிய படங்களில் 100 கோடி வசூல் சாதனையைப் படைத்திருந்தார். அவருக்குப் பிறகு இப்போது அல்லு அர்ஜுன் "புஷ்பா" மூலம் 100 கோடி சாதனையைப் படைத்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!