ஹிந்தியில் மேலும் ஒரு சாதனை படைத்த புஷ்பா 2
டிச 18, 2024
Advertisement
அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வெளிவந்த "புஷ்பா 2" படம் வசூலில் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. அடுத்ததாக ஹிந்தியில் மிக விரைவில் 600 கோடி வசூலைக் கடந்த படம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. மொத்தம் 13 நாட்களில் இந்த சாதனைநிகழ்ந்துள்ளது.
நேரடி ஹிந்திப் படங்களை விடவும் தெலுங்கிலிருந்து டப்பிங் ஆன ஒரு படம் இவ்வளவு வசூல், புதிய சாதனை என படைப்பது ஆச்சரியம்தான். ஹிந்தித் திரையுலகத்திலும் 1000 கோடி வசூல் சாதனை இதற்கு முன்பு மூன்று முறை நிகழ்ந்திருந்தாலும் இந்த "புஷ்பா 2" சாதனை எதிர்பார்த்ததை விடவும் மிக அதிகமாக உள்ளது.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையிலும் ஹிந்தியில் இப்படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னமும் வசூலைக் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!