துரந்தர் 3 பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட சூசக தகவல்
மே 09, 2026
Advertisement
ஹிந்தியில் கடந்த டிசம்பர் மற்றும் மார்ச் என அடுத்தடுத்து நான்கு மாத இடைவெளியில் துரந்தர் மற்றும் அதன் இரண்டாம் பாக படங்கள் வெளியாகின. ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் 1300 கோடியும், இரண்டாம் பாகம் 1700 கோடியும் என கிட்டத்தட்ட மொத்தமாக 3000 கோடி அளவிற்கு வசூலித்து சாதனை படைத்தது. இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றால் இயல்பாகவே மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு இருக்கும்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு மூன்றாம் பாகத்தை எடுக்கும் ஆர்வமும் கூட இருக்கும்.
இந்த நிலையில் தான் துரந்தர் படத்தின் தயாரிப்பாளர் ஜோதி தேஷ்பாண்டே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது "துரந்தர் கதையை நாங்கள் இன்னும் முடிக்கவில்லை, இந்த ஆண்டின் இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது" என்று அறிவித்துள்ளார்.
அந்த வகையில் துரந்தர் 3 உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே அவர் சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார் என்றே தெரிகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!