கேஜிஎப் 2 - ஹிந்தியில் குறைந்த நாட்களில் ரூ.250 கோடி சாதனை
ஏப் 21, 2022
Advertisement
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் "கேஜிஎப் 2". இப்படம் நேரடி ஹிந்திப்படங்களைக் காட்டிலும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.
ஹிந்தியில் மிகக் குறைந்த நாட்களில் ரூ.250 கோடி வசூலைத் தாண்டி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. ஏழே நாட்களில் அந்த வசூலைத் தொட்டுளளது. இதற்கு முன்பு "பாகுபலி 2" படம் எட்டு நாட்களில் ரூ.250 கோடி வசூல் புரிந்ததுதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை "கேஜிஎப் 2" முறியடித்துள்ளது.
நேரடி ஹிந்திப் படங்களில் "டங்கல், சஞ்சு, டைகர் ஜிந்தா ஹை" ஆகிய படங்கள் 10 நாட்களில் ரூ.250 கோடி வசூலைக் கடந்துள்ளன. நேரடி ஹிந்திப் படங்களைக் காட்டிலும் இரண்டு தென்னிந்தியப் படங்கள் இந்தப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. "கேஜிஎப் 2" ஹிந்தியில் ரூ.300 கோடியைக் கடந்துவிடும்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!