
தொடரும் தோல்விகள் - மீண்டும் இயக்குனராகும் கங்கனா
மே 31, 2022
தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தில் நடித்தார் கங்கனா ரனாவத். ஏ.எல்.விஜய் இயக்கிய அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதேபோல் ஹிந்தியில் தாக்கட் என்ற ஒரு படமும் கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியானது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான அப்படம் ரூ.5 கோடி கூட வசூலிக்கவில்லை. இப்படி தனது படங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை கொடுத்து வருவதால், தற்போது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு கதையை எமர்ஜென்சி என்ற பெயரில் தானே இயக்கி, நடிக்க முடிவெடுக்கிறார் கங்கனா. ஏற்கனவே அவர் இயக்கி நடித்த மணிகர்ணிகா படம் சூப்பர் ஹிட் அடித்ததால் மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறாராம் கங்கனா.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!