
ராமாயணா தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமானவரி சோதனை
ராமாயணா இருபாகங்களும் சேர்த்து 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. தற்போது படத்தின் உரிமங்கள் விற்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ஹிந்தி தியேட்டர் விநியோக உரிமையை தர்மா புரொடக்ஷன்ஸ் சுமார் 250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் வெளிநாட்டு பண பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து மும்பையில் "ராமாயணா" படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போக்கஸ் நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது. இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…