
ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார்
ஹிந்தியில் ‛அரவிந்த் தேசா கி ஆஜிப் தஸ்தன்" என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் பெரும்பாலும் காமெடி கலந்த குணச்சித்ர வேடங்களில் தான் அதிகம் நடித்தார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சீரியல்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். குறிப்பாக 2004ல் இவர் நடித்த சாராபாய் வெசஸ் சாராபாய் என்ற சீரியல் இவரை இன்னும் பிரபலமாக்கியது.
இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஞாயிறு அன்று இவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!