
அனிமல் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு
அக் 10, 2023
Advertisement
அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தற்போது ஹிந்தியில் நடிகர் ரன்பீர் கபூரை வைத்து உருவாக்கி வரும் திரைப்படம் "அனிமல்". ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் ஹிந்தியில் (உயா மெயின்) தமிழில் (நீ வாடி) என்கிற இப்பாடல் நாளை வெளியாகும் என ரன்பீர், ராஷ்மிகா லிப்லாக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!