
நடிகர் அமீர் கான் - கிரண் ராவ் தம்பதி திடீர் விவாகரத்து
பின்னர் 2005-ம் ஆண்டு கிரண் ராவை அமீர் கான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இன்று அமீர் கான் - கிரண் ராவ் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது : 15 ஆண்டுகாலம் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்தோம். ஆனால் நாங்கள் இருவருமே தனித்தனியாக புதிய வாழ்க்கைக்குள் நுழைகிறோம். இனி நாங்கள் கணவன் மனைவி அல்ல. பெற்றோர் மட்டுமே... இந்த முடிவை சில காலத்துக்கு முன்பே எடுத்துவிட்டோம். ஆனால் சில நடைமுறைகளால் அறிவிக்க தாமதம் ஆனது.
நாங்கள் இருவரும் மண வாழ்க்கையில் பிரிந்தாலும் தொடர்ந்து திரைத்துறையிலும், சமூகசேவையிலும், எங்கள் குழந்தையை வளர்ப்பதிலும் இணைந்தே செயல்படுவோம். விவாகரத்து என்பது முடிவு அல்ல. அது இன்னொரு புதிய வாழ்க்கைக்கான தொடக்கம். எங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறோம்". இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!