விமர்சனம்
அர்ஜூன், விமல், ரித்விக் வருண் (டைரக்டர் வஸந்த்தின் வாரிசு), முக்தாபானு, சுர்வின், லாசினி, தம்பிராமையா, அப்புக்குட்டி, சத்யன், ஜான் விஜய், "ஆடுகளம்" நரேன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இனிதாக இசையமைத்திருக்கிறார், போஜன் கே.தினேஷ் திறம்பட ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நா.முத்துக்குமார் நல்ல அர்த்த புஷ்டியான பாடல்களை எழுதியிருக்கிறார். மகி அழகாக கலை இயக்கம் செய்திருக்கிறார். எஸ்.என்.பாஸில்வுடன், எஸ்.எம்.வஸந்தும் அமர்ந்து படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்!
ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் "கேளடி கண்மணி", "ஆசை" படங்களின் இயக்குனர் வஸந்த், இன்னமும் தலையணையில் மூச்சுகாத்து பிடிக்கும் காலத்திலேயே இருப்பதால் "மூன்று பேர் மூன்று காதல்", "முந்நூறு பேர் மூவாயிரம் காதலாக" இருக்கிறது, இழுக்கிறது!
இயக்குனர் வஸந்த், எஸ்.எம்.வஸந்த் ஆக மாறியது மாதிரி அவரது இயக்கத்திலும் நிறைய மாற்றங்கள் தேவை!
ஆகமொத்தத்தில், "மூன்று பேர் மூன்று காதல்" படத்தை, "முடிந்தால், முடிந்தவரை பார்"க்கலாம்!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!