விமர்சனம்
படத்தின் கதாநாயகனாக புதுமுகம் உதயகுமார் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக இனியா என்பவர் நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் காதல், சென்ட்மெண்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறார் படத்தின் இயக்குநர் ராம் குமார். இவரே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அமைத்து இயக்குகிறார். குமார் என்பவர் இசையமைக்க, ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் சூட்டிங் மூணாறு, வாகமன், கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கியிருக்கின்றனர். படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும், அதனைத்தொடர்ந்து படமும் ரிலீசாக இருக்கிறது.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!