விமர்சனம்
அ நிறம் | அளவு
போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றும் குஞ்சாக்கோ போபனுக்கு சினிமாவில் கதாசிரியர் ஆக ஆர்வம். இயக்குனர் ஒருவர் அவரிடம் சிக்கலான போலீஸ் வழக்கை கதையாக கொண்டுவரச் சொல்கிறார். திடீரென வேறொரு ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும் குஞ்சாக்கோ, அங்கே அனைவரும் தொடவே பயப்படும் ஒரு இளம் பெண்ணின் தற்கொலை பைலை தனது புதிய கதைக்காக கையில் எடுக்கிறார். அதைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையில் அடுக்கடுக்காக பிரச்சனைகள் முளைக்கிறது. படத்திற்கு உண்மையான கிளைமாக்ஸ் வேண்டும் என்பதால், அந்த வழக்கை அவர் தீவிரமாக ஆராய துவங்க, இதனால் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி அவரே சிறைக்குச் செல்லும் சூழல் உருவாகிறது. அந்த வழக்கில் உள்ள மர்மத்தை குஞ்சாக்கோ போபன் கண்டுபிடித்தாரா, அவரால் சினிமாவுக்கான கதையை உருவாக்க முடிந்ததா என்பது மீதிக் கதை.
போலீஸ் விசாரணை குறித்த கதைகளில் ஏதாவது வித்தியாசம் காட்டினால் மட்டுமே ரசிகர்களிடம் எடுபடும் என்பதை மனதில் கொண்டு துல்லியமாக இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
ஒரு பக்கம் மனைவி மற்றும் உயர் அதிகாரிகளிடம் திட்டு வாங்கிக் கொண்டு, இன்னொரு பக்கம் சினிமாவில் சாதிக்க போராடும் வித்தியாசமான போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் குஞ்சாக்கோ போபன் அழகாக பொருந்தியிருக்கிறார். அந்த மர்ம வழக்கை தொட்டதும், அதன்பிறகு அவர் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை இடைவேளைக்குப் பின் தனது நடிப்பால் அசாத்தியமாக கையாண்டிருக்கிறார்.
ஜாடிக்கேத்த மூடி போல குஞ்சாக்கோ போபனின் மனைவியாக, எண்ணெயில் போட்ட கடுகாக பொரியும் கதாபாத்திரத்தில் லிஜோமோல் ஜோஸ் கச்சிதம். கணவன் முன்னேற வேண்டும் என்று தவிப்பதும், அதே சமயம் குடும்பச் சூழல் காரணமாக அவரை அவ்வப்போது போட்டு தாளிப்பதும் என நடிப்பில் இருமுகம் கட்டுகிறார..
போலீஸ் அதிகாரிகளாக வரும் கோட்டயம் நசீர், சாபுமோன் அப்துசமது, கிளைமாக்ஸில் மட்டும் வழக்கறிஞராக வரும் சித்திக் என அனைவருமே பொருத்தமான தேர்வு என்று சொல்ல வைக்கிறார்கள்.
இசையமைப்பாளர் முஜீப் மஜீத் போலீஸ் படம் என்றாலும் தனது பின்னணி இசையால் ஒரு ஹாரர் படத்திற்கான எபெக்டை படம் முழுக்க கொடுத்திருக்கிறார். குஞ்சாக்கோ போபனின் குழம்பித் தெளியும் மனநிலையை, அந்த நாலு சுவற்றுக்குள் நாமும் அருகில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் சேது.
ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சினிமா கதாசிரியராக மாற முயற்சிக்கிறார் என்கிற வித்தியாசமான ஒரு கோணத்தில் கதையை யோசித்துள்ளனர் இயக்குனர் கிரண் தாஸ் மற்றும் கதாசிரியர் ஷாஹி கபீர். கூடவே ஒரு வழக்கை யார் தொட்டாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறது என்கிற ஆர்வத்தையும் ஆரம்பத்திலிருந்து ஏற்படுத்தி, அடுத்து என்ன நடக்கும் என இடைவேளைக்கு முன்பு இருந்தே நம் மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்து விடுகிறார் இயக்குனர் கிரண் தாஸ். குறிப்பாக இடைவேளைக் காட்சி நாம் யூகிக்க முடியாத ஒன்று.
ஹாரர் படம் இல்லை என்றாலும் லேசாக அமானுஷ்யத்தை உள்ளே கலந்து ரசிகர்களை ஒருவித டென்ஷனிலேயே இருக்க வைத்ததில் இயக்குனருக்கு ஓரளவு வெற்றிதான். அதேபோல அந்த இளம்பெண் தற்கொலை மரணத்திற்கான காரணம் என்ன என்பது ஆச்சரியப்படுத்தினாலும், கிளைமாக்ஸில் இதுதான் நடக்கப்போகிறது என நம்மால் யூகிக்க முடிகிறது. குஞ்சாக்கோ போபன், லிஜோமோல் ஜோஸ் சம்பந்தப்பட்ட குடும்ப சண்டை காட்சிகளை பத்து நிமிடங்கள் குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
உன்மாதம் - போலீஸ் கதையில் இது(வும்) ஒரு தினுசு

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!