விமர்சனம்
அ நிறம் | அளவு
அரசு அதிகாரியாக பணியாற்றும் பிரித்விராஜ், அவரது மனைவி பார்வதி, இரண்டு பெண் குழந்தைகள் என அளவான குடும்பமாக இருந்தாலும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கிட்டத்தட்ட விவாகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். ஒருநாள் பிரித்விராஜ் வங்கி ஒன்றுக்கு செல்ல, அங்கே வங்கிக் கொள்ளையர்கள் அவரைப் பிணைக் கைதியாகக் கடத்திச் சென்று இடையில் இறக்கி விடுகின்றனர். எதிர்பாராத விதமாக அந்த கொள்ளையர்கள் விபத்தில் இறக்க, கொள்ளையடிக்கப்பட்ட பணம் மாயமாகிறது.
இதனால் சந்தேகப் பார்வை பிரித்விராஜ் மீது திரும்ப, போலீஸ் விசாரணை மற்றும் பணத்திற்காக தாக்குதல் நடத்தும் வெவ்வேறு கும்பல்கள் என அவர் சிக்கலில் மாட்டுகிறார். இதற்கிடையில் அவரது மூத்த மகள் கடத்தப்பட, அந்தப் பணத்தைக் கேட்டு மிரட்டல் வருகிறது. பணம் உண்மையில் பிரித்விராஜிடம் தான் இருக்கிறதா அல்லது வேறு யாராவது நாடகம் ஆடுகிறார்களா ? மகளை அவர் மீட்டாரா ? குடும்பப் பிரச்னை தீர்ந்ததா என்பதை விறுவிறுப்பான கிளைமாக்ஸ் சொல்கிறது.
ஒரு வங்கிக் கொள்ளை, அதன் பின்னணியில் சிக்கிக்கொண்ட ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் என இரண்டையும் அழகாக இணைத்து ஒரு புதிய பாணியில் இந்த கதையை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு சராசரி அரசு உத்தியோகஸ்தராக, அதேசமயம் தன் மீதான தாக்குதல்களை தைரியமாக எதிர்கொண்டு சமாளிக்கும் வீரராக, படம் முழுவதும் பிரித்விராஜ் கதையை தன் தோள் மீது தூக்கிக் கொண்டு ஓடுகிறார். குறிப்பாக கால் மணி நேரத்திற்கு ஒருமுறை தாக்குதலை அவர் எதிர்கொள்வதும் அதிலிருந்து தப்பிப்பதும் என ஆக்ஷனிலும் அவர் குறை வைக்கவில்லை. கிளைமாக்ஸில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான நபர்களை அவர் சமாளித்து தப்பிப்பது என்பது சினிமாத்தனம் என்றாலும், கதையோடு பார்க்கும்போது சரியாகவே பிரித்விராஜ் அதை செய்திருக்கிறார்.
பிரித்விராஜின் மனைவியாக, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக, கணவருடன் முரண்பட்டு நிற்கும் கதாபாத்திரத்தில் பார்வதி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகள் கடத்தப்பட்ட பிறகு போலீஸ் விசாரணையை எதிர்கொள்வதும், மீடியாக்களை சாதுர்யமாக தன் பக்கம் திருப்புவதும் என தன்னுடைய பங்கிற்கு அவரும் சதுரங்க ஆட்டம் ஆடியிருக்கிறார்.
வங்கியில் கொள்ளையடித்தவர்களை கோட்டை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் ஹக்கீம் ஷாஜகான். அவருக்கான பதவி சிறிதாக இருந்தாலும், அந்த வழக்கை அவர் துப்பு துலக்கி, அந்தப் பணத்தைத் தன் வசப்படுத்த எடுக்கும் முயற்சிகள் எல்லாம் ஒரு கிரிமினல் ஆபீசரை கண்முன் நிறுத்துகின்றன. ஆரம்பத்தில் பிரித்விராஜிடமும் கடைசியில் பார்வதியிடமும் அந்த பணத்தை கைப்பற்றுவதற்கு அவர் நாடகமாடுவதும், அதிலே அவரே சிக்கிக்கொள்வதும் என நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனாக நடித்துள்ள அசோகன், கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து ஒரு பகுதியை கைப்பற்றத் திட்டம் தீட்டுவது, ஒரு கட்டத்தில் பிரித்விராஜுக்கு பக்கபலமாக இணைந்து செயல்படுவது என கதையை நகர்த்துவதற்கு செவ்வனே உதவியிருக்கிறார். விசாரணை போலீஸ் உயரதிகாரியாக வரும் சங்கர் ராமகிருஷ்ணன், முதல்வராக கிளைமாக்ஸில் வந்து ட்விஸ்ட் கொடுக்கும் விஜயராகவன், குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா என அனைவரின் நடிப்பும் சிறப்பு.
பாடல்களைக் குறைத்துக் கொண்டு பின்னணி இசையில், அதுவும் குறிப்பாக முக்கியமான காட்சிகளில் ஹிந்தி பாடல்களை பின்னணியில் ஒலிக்க விட்டு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய். ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் அப்பார்ட்மெண்ட் காட்சிகளையும் சேசிங் காட்சிகளையும் படமாக்கிய விதம் சிறப்பு என்றால், கிளைமாக்ஸில் கிட்டத்தட்ட கால்மணி நேரம் பிரித்விராஜின் ஓட்டம் மற்றும் சண்டைக் காட்சிகளைப் படமாக்கிய விதத்தில் இருக்கை நுனியில் அமர வைத்திருக்கிறார். ரமேஷ் எம்.பி-யின் படத்தொகுப்பு நம்மை அந்தப் பக்கம் இந்த பக்கம் என நகர விடாமல், அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்க்கும் விதமாக கட்டிப்போட்டு விடுகிறது.
இதற்கு முன்பு வங்கிக் கொள்ளைகளை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், இதில் வங்கிக் கொள்ளையை ஒரு குடும்பத்தின் பிரச்னையாக மாற்றி, அதை லாவகமாக கையாண்ட விதம் புதிது என்றே சொல்லலாம். பிரித்விராஜ் தான் பணத்தை எடுத்தாரா என சந்தேகப்படும் போலீசார் ஆரம்பத்திலேயே சிசிடிவி காட்சிகளை கண்காணிக்காமல் விட்டுவிடுவது உள்ளிட்ட சில வசதியான லாஜிக் ஓட்டைகளும் இருக்கின்றன. அதேபோல பிரித்விராஜ் ஒரு சராசரி குடும்பத் தலைவனாக இருந்தாலும், தன்னை தாக்க வரும் ஒட்டுமொத்த கும்பலையும் சளைக்காமல் அடித்து துவம்சம் செய்வது ஒருகட்டத்தில் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? என்று நினைக்க வைக்கிறது.
ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையில் எந்தத் தொய்வும் ஏற்படாமல் விறுவிறுப்பு குறையாமல், கடைசியில் கருத்து வேறுபாட்டுடன் குடும்பம் நடத்தும் தம்பதிகளுக்கான ஒரு மெசேஜையும் சொல்லியிருக்கிறார்கள். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஐ நோ படி என்பதற்கான அர்த்தத்தையும் கடைசியில் பொருத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் நிசாம் பஷீர்.
ஐ நோ படி - சண்டமாருதம்

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!