விமர்சனம்
அ நிறம் | அளவு
சொந்த வீடு கட்டியதால் கடனாளி ஆகிறார் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கும் அர்ஜுன் தாஸ். வீட்டு வாடகை லீஸ் விஷயத்தில் ஏமாறுகிறார் அன்னாபென். தனது தாய் வடிவுக்கரசியின் ஆபரேஷன் செலவுக்காக திண்டாடுகிறார் யோகி பாபு. இவர்கள் மூவருக்கும் பணம் தேவை இருக்கிறது. ஆகவே வேறு வழியின்றி புதுவகை மோசடி மூலம் பணம் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகிறார்கள். நன்றாக வாழ்க்கை செல்லும் நிலையில் பல கோடி பணத்தை இழந்து சென்னையில் இருந்து மங்களூர் சென்று ஓட்டல் நடத்தி செட்டில் ஆகிறார்கள். அப்போது அன்னாபென் மகன் கடத்தப்பட, என்ன நடக்கிறது? அவனை கடத்தியது யார்? மோசடியில் ஈடுபட்ட மூவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பித் தந்தார்களா? என்பது கான்சிட்டி படத்தின் கதை.
இதுவரை ஆக் ஷன் மற்றும் வன்முறை படங்களில் நடித்து வந்த அர்ஜுன் தாஸ் இதில் கடனால் பாதிக்கப்பட்டு, சூழ்நிலை காரணமாக பணம் தேவைக்காக மோசடி பேர் வழியாகும் கேரக்டரில் நடித்துள்ளார். வழக்கமான காதல், ஆக் ஷன், பில்டப் இல்லாவிட்டாலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், அவர் நடிப்பு நிறைவு. குறிப்பாக காதலி வீட்டுகாரர்களால் அடமானபடும்போது, நவீன மோசடியால் மின் கட்டணம் கட்டுபவரை ஏமாற்றும்போது, மாட்டிக்கொள்வோமோ என தத்தளிக்கும் போது, வில்லனை திட்டம் போட்டு சிக்க வைக்கும் போது ஸ்கோர் செய்து இருக்கிறார். அன்னா பென்னுக்கு அவர் ஜோடி இல்லை என்பது பெரிய ஏமாற்றம். அவர் சம்பந்தப்பட்ட இன்னொரு காதல் சீன் வழக்கமானது.
வாடகை லீஸ் விஷயத்தில் மோசடி பண்ணும் கேரக்டரில் அன்னா பென் மிரட்டி இருக்கிறார். ஆனாலும் அவருக்கான காட்சிகள் மிக குறைவு அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார் இயக்குனர் என்று சொல்லலாம்.
சினிமா தயாரிக்கும் ஆர்வலராக, தாய் வடிவுக்கரசி மருத்துவ செலவுக்காக ஆன்லைனில் பண மோசடி செய்பவராக யோகி பாபு வருகிறார். அவரும் வடிவுக்கரசியும் இணைந்து அடிக்கும் லூட்டிகள், அவர்களின் சினிமா மோகம், மோசடி பண்ணும் இடம், செல்லச் சண்டைகள் ஆகியவை கான்சிட்டி படத்துக்கு பெரிய பிளஸ். பல இடங்களில் தனது அனுபவ நடிப்பால் வடிவுக்கரசி கலக்கி இருக்கிறார். ராதாரவி, அருள் தாஸ் சின்ன கேரக்டரில் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.
இவர்களை தவிர மின்சார வாரிய ஊழியராக வரும் வி டி வி கணேஷ் தான் வரும் இடங்களில் தன் பங்கிற்கு கலகலக்க வைக்கிறார். இன்ஸ்பெக்டராக வரும் நந்தகோபால் கேரக்டரும் கதையில் முக்கியத்துவமாக இருக்கிறது.
ஒரு பண மோசடி பின்னணியில் டார்க் காமெடி ஜானரில் படம் உருவாகி உள்ளது. படம் முழுக்க ஒளிப்பதிவில் ஒரு வித டார்க் டோன் தெரிகிறது. அந்த வகையில் ஒளிப்பதிவாளர் விஸ்வநாதனை பாராட்டலாம். ஷான் ரோல்டன் இசையும் ஓகே ரகம். கிளைமாக்சில் வரும் ஏமாற்றாதே பாடல் செம எனர்ஜி.. படம் முழுக்க வரும் ஒருவித சீரியஸ்தனமும் பல கேரக்டரின் நடிப்பில் இறுக்கமும் படத்தை அன்னியப் படுத்துகிறது.
மின்சார வாரியத்தில் நடக்கும் ஊழல்கள் பகீர். இப்படி எல்லாம் ஏமாற்றுவார்களா என்று பயம் ஏற்படுகிறது அதேபோல் மருத்துவ உதவி கேட்டு ஆன்லைனில் செய்யப்படும் மோசடிகள் அதன் பின்னணி குறித்து விரிவாக விளக்கி இருக்கிறார் இயக்குனர். வீட்டு வாடகை, நிலம், லீஸ் விஷயத்தில் நடக்கும் மோசடிகளை சொல்கிறார் அன்னாபென். அவர் ஏமாற்றும் விதம் அருமை. இந்த வகை மோசடி கருத்துக்கள் ஒருவகை விழிப்புணர்வு. அடுத்த மோசடிகளில் சினிமாதனம் அதிகம். போலீஸ், மற்ற அமைப்பு என்ன செய்தது என்ற கேள்வியும் யோசிக்க வைக்கிறது.
நிறைய பிளஸ் இருந்தாலும் படத்தில் நடித்தவர்கள் நடித்து தள்ளுகிறார்கள் அல்லது பேசிக் கொண்டே இருக்கிறார்கள்; இதுதான் பெரிய மைனஸ். பார்வையாளர்களை தன் வசம் இழுக்கும் காட்சிகளோ வசனங்களோ இல்லாதது பெருங்குறை.
அர்ஜுன்தாஸ் காதல் தனி ட்ராக்காக போகிறது, அதிலும் நிறைவில்லை. சில சமயம் அவர் பேசுவதும் தெளிவில்லை. அன்னாபென் குடும்பம், குழந்தை குறித்த தகவல்களில் முழுமை இல்லை, அது குழப்பமாக இருக்கிறது. இடைவேளைக்கு பின் மங்களாபுரம், மங்களூர், புது மோசடி பிளான் என்று நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆனாலும் அதில் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை. ஏதோ கண்டுபிடிப்பு, முதலீடு என சொல்வதில் புதுமை இல்லை. அது இன்னும் குழப்புகிறது.
அன்னாபென் மகனாக வரும் அகிலும் நடிப்பில் கலங்குகிறான். அவனுக்கும் வில்லனுக்கும் ஆன காட்சிகள் கிளைமாக்ஸில் அவன் நடத்தும் நாடகம் சூப்பர். அந்த கொரியன் பட காமெடி சிரிக்க வைக்கிறது. விடிவி கணேஷ் ரசிக்க வைக்கிறார். ஆனாலும் காமெடிக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம். அது படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்கும்.
கான்சிட்டி என்ற தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்ன பார்வையாளர்கள் கேட்கலாம், படம் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்றும் கேட்கலாம், பணத்தை இழந்தவர்கள் பணத்தை சம்பாதிக்க புதுவகை மோசடி செய்வதாக கதை நீள்கிறது. அதுவே பல இடங்களில் மோசடிக்கு துணை போகும் கதையாகும் விரிகிறது. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் வலி இன்னொரு பக்கத்தை சொல்லவில்லை. அது திரைக்கதையில் பல கேள்விகளை எழுப்புகிறது. கதை சொல்லும் முறை, கிளைமாக்ஸ் ஆகியவற்ற இன்னும் எளிமைப்படுத்தி இருக்கலாம்.
இடைவெளிக்கு பின் யோகி பாபு சம்பந்தப்பட்ட டார்க் காமெடியில் ஆங்காங்கே சிரிப்பு வருவதும் சில இடங்களில் ரசிக வைப்பதும் ஆறுதல். எந்த காலகட்டத்தில் கதை நடக்கிறது என்ற விஷயத்திலும் தெளிவில்லை. சீரியஸான கதையில் டார்க் காமெடி டோன் என்ற ஜானர் பல இடங்களில் ஒர்க் ஆகவில்லை. ஆனாலும் அர்ஜுன் தாஸ், யோகி பாபு இருப்பதால் ஓரளவு போரடிக்காமல் இருக்கிறது.
இப்படியெல்லாம் மோசடி செய்வார்கள், இப்படி பணத்தை ஏமாற்றுவார்கள் உஷார் என்ற கரு ஓகே. ஆனால் அதை சொல்லும் முறையில் குழப்பி, பார்வையாளர்களை ஏமாற்றி இருக்கிறார் இயக்குனர். டார்க் காமெடி பின்னணியில் மோசடி கதை, காமெடியில் மோசடி பண்ணி, மோசடியை டார்க் ஆக்கி இருக்கிறார் இயக்குனர்.
கான்சிட்டி - தடுமாற்றம்

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!