விமர்சனம்
அ நிறம் | அளவு
மனதளவில் ராஜாவாக - சுற்றத்தை ஒரு ராஜ்ஜியமாக நினைத்து வாழும் ஒருவனின் கதைதான் படம். அதனால்தான் படத்தின் தலைப்பை குறுநில மன்னன் என வைத்திருக்கிறார்களாம். மருதுபாண்டியர் வாழ்ந்த மண்ணில் நடக்கும் கதை என்பதால் மருதுபாண்டியர் பற்றி ஒரு கூத்தாடும் கலைஞர் கதை சொல்வதாக ஒரு பாடல் இடம் பெறுகிறது.
மருதுபாண்டி வீரத்தோட கதையைக் கொஞ்சம் கேளுங்க
பெரிய மருது சின்ன மருது அண்ணன் தம்பி தானுங்க!
முன்னவரோ வேட்டையில் வேங்கை புலிதானுங்க
பின்னவரோ நாட்டையாளும் சூரப்புலிதானுங்க!! எனத் தொடங்கி தொடரும் பாடலை கவிஞர் நா.முத்துகுமார் எழுதியுள்ளார். படத்திற்கு இசை ஜோஹன் என்ற புதுமுகம். ஒளிப்பதிவு இராசாமதி.
குறுநில மன்னன் குறித்து டைரக்டர் முருகையா கூறுகையில், இந்த படத்தில் ஆசாபாசங்கள் உண்டு. ஆபாசமில்லை. ரத்தபாசம் புரிய வைக்கும். ரத்த வாசகம் தெரிய வைக்காது. இயல்பான காமெடி உண்டு. இயல்பு மீறும் காமநெடி இருக்காது, என்றார்.
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!